திமுக அனுதாபியாக இருந்த ஐ.லியோனிக்கு திமுகவில் முக்கியத்தும் கொடுக்கும் விதமாக திமுகவின் கொள்கைபரப்பு செயலாளர் பதவி வழங்கியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதன் அடிப்படையில் நன்றி தெரிவித்து லியோனி தரப்பில் போஸ்டர் அடித்து ஓட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோரின் படங்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருந்தது.

திண்டுக்கல் திமுக முக்கியப்பிரமுகர்கர்களாகன திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ பெரியசாமி, அவரது மகன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்எல்ஏ மற்றொரு மாவட்ட செயலாளர் சக்ரபாணி ஆகியோரின் படங்கள் இல்லை. இதன் எதிரெரலியாக திண்டுக்கலில் ஓட்டப்பட்டிருந்த லியோனி போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஐ லியோனி தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்டரில் படங்கள் இல்லாததற்கு நான் காரணம் இல்லை.. ஐ பெரியசாமி, செந்தில்குமார் மற்றும் சக்ரபாணி ஆகியோர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு என விளக்கம் அளித்துள்ளார். தென்மாவட்டத்தை பொறுத்தவரை திமுகவில் ஐ.பெரியசாமி எதிர்த்து யாரும் அரசியல் செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.