dig roopa need to visit psychiatrist said jeyaananaath

DIG ரூபா நல்ல “மனநலமருத்துவரை பார்க்கட்டும்..! திவாகரனின் மகன் அதிரடி பேட்டி..

ஊழல் வழக்கில் கைதான சசிகலா, தற்போது பெங்களூரு அக்ரஹார சிறையில்உள்ளார். இன்நிலையில் சிறையிலிருந்து சசிகலா வெளியில் ஷாப்பிங் செல்வது போன்ற ஒரு வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் டிஐஜி ரூபா, சசிகலா ஜெயிலிலிருந்து அடிக்கடி வெளியில் சென்று வருவதாகவும், அவருக்கு ஜெயிலில் வழங்கப் பட்டு வரும் சலுகைகள் குறித்தும் அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து பேசி வந்தார். இந்த தகவல் மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பாகும் தமிழக அரசியல்

ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் இணையும் செய்தி இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பில் இருக்கும் போது, சசிகலா மீது மேலும் மேலும் பல குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதற்கு உதாரணம் DIG ரூபா,சசிகலா ஷாப்பிங் செய்ய வெளியே செல்வது போன்ற அந்த வீடியோவை சமர்ப்பித்தை கூறலாம் 

தம்பி திவாகரனின் மகன் ஜெயானந், DIG ரூபா சசிகலா மீது தொடர்ந்து பொய்குற்றசாட்டுகளை கூறுவதால் அவர் நல்ல மனநலமருத்துவரை அணுக வேண்டும் என குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது