Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவை சாக்கடை நீர் என்று விமர்சித்தேனா..? துக்ளக் குருமூர்த்தி அதிரடி விளக்கம்..!

 மன்னார்குடி குடும்பத்தினரை மாஃபியாவாக துக்ளக்கில் குறிப்பிடுவோம்.  அவர்கள் அதிமுகவுக்கு  திரும்பினால், திமுகவை போல அதிமுகவும் குடும்பக் கட்சியாக மாறிவிடும். 

Did you criticize Sasikala as a sewer ..? Tughlaq Kurumurthy Action Description ..!
Author
Chennai, First Published Jan 15, 2021, 9:11 PM IST

சசிகலாவை சாக்கடை நீர் என்று விமர்சித்தேனா என்பது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
 சென்னையில் நடந்த 'துக்ளக்' ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடை நீர் பேசியதாக சர்ச்சை எழுந்தது.  இந்நிலையில் இதுதொடர்பாக குருமூர்த்தி ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “1987-ல் நானும் அருண்ஷோரியும் ராஜீவ்காந்தி பற்றிய ஊழல் தகவல்களை சந்திரசுவாமி என்ற சாமியாரிடம் பெற்றோம். அப்போது சிலர் அருண்ஷோரியிடம், தூய்மை அரசியல் பேசிக்கொண்டு சந்திரசுவாமியிடம் உதவி கேட்கிறீர்களே?’ என்று கேட்டனர்.  அதற்கு ஷோரி பதிலளிக்கையில், “கங்கை ஜலத்திற்காகக் காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தைக் கூட வாரி வீச வேண்டும்” என்று அருண் ஷோரி கூறினார். இதைத்தான் மேற்கோள் காட்டி பேசினேன்.Did you criticize Sasikala as a sewer ..? Tughlaq Kurumurthy Action Description ..!
இதை நான் கூறும்போது, அமுமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து திமுகவை எதிர்த்து நிற்க வேண்டுமா என்று வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “பாஜக என்ன செய்யும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்” என்று வாசகர்களிடம் சொல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால், கடைசியாக வாசகர் சொன்னது போன்ற ஏதாவது நடந்தால், துக்ளக்கால் இப்போது சொல்ல முடியாது. ஆனால், மன்னார்குடி குடும்பத்தினரை மாஃபியாவாக துக்ளக்கில் குறிப்பிடுவோம்.  அவர்கள் அதிமுகவுக்கு  திரும்பினால், திமுகவை போல அதிமுகவும் குடும்பக் கட்சியாக மாறிவிடும். அவர்கள் மீதான என்னுடைய கருத்தில் மாற்றம் இல்லை” என்று குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios