ஆளுநருக்கென்றே திரைப்பட இயக்குநர் இந்த பெயரை முன்கூட்டியே வைத்திருக்கிறாரோ? பங்கமாய் கலாய்க்கும் காங்கிரஸ்.!
இந்திய அரசியலமைப்பை மிகவும் மதிக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எந்தவொரு ஆளுநரும் அவையின் மாண்பை இவர் போன்று மீறியதில்லை.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து அவையில் விவாதம் செய்து, ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக தீர்மானத்தை முன்மொழிய உள்ளேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு அரசு தொகுத்தளித்த உரையை வாசிக்காமலும், சில முக்கியமான பத்திகளை விடுத்தும், சில அவசியமில்லாத பத்திகளை புகுத்தியும் வாசித்தார். அவை முடிந்து பின் தேசியகீதம் வாசிக்கப்படுவது மரபு. அதற்கு பின்பு தான் ஆளுநர் அவையை விட்டு வெளியேறுவார்.
இதையும் படிங்க;- TN Assembly 2023 : உப்புச் சப்பில்லாத ஆளுநர் உரை இது.! திமுகவா? ஆளுநரா? ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு.!!
ஆனால், மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புகளையும் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியும் மற்றும் தேசியகீதம் வாசிப்பதையும் தவிர்த்து வேண்டுமென்றே அவமரியாதை செய்திருக்கிறார். இந்திய அரசியலமைப்பை மிகவும் மதிக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எந்தவொரு ஆளுநரும் அவையின் மாண்பை இவர் போன்று மீறியதில்லை.
தமிழ்நாடு அரசு ஆளுநர் உரைக்கென்று தயாரித்து கொடுத்த அறிக்கையில் அவர் குறிப்பாக சில பத்திகளை விட்டு விட்டு படித்தது 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்னும் திரைப்படத்தின் பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆளுநருக்கென்றே திரைப்பட இயக்குநர் இந்த பெயரை முன்கூட்டியே வைத்திருக்கிறாரோ என்று எனக்கு தோன்றியது.
எனவே, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து அவையில் விவாதம் செய்து, ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக தீர்மானத்தை முன்மொழிய உள்ளேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.. ஆளுநரே இப்படி செய்யலாமா? திமுகவுக்கு குரல் கொடுக்கும் அன்புமணி..!