அதேவேளை, சசிகலா மதுசூதனை சந்தித்து கைரேகை பெற்று வைத்துள்ளார் எனவும் கூறுகிறார்கள்.
அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக அவைத்தலைவராக இருக்கும் அவரிடம் இருந்து பதவி விலகல் கடிதத்தை, இ.பி.எஸ்., வாங்கப் போகிறார் என்கிற தகவல் சசிகலாவுக்கு கிடத்துள்ளது. அதனால் சசிகலா, மதுசூதனனை பார்க்க திட்டம் போட்டு இருக்கிறார். ''இதனை தெரிந்து கொண்ட இ.பி.எஸ்., சேலத்தில் இருந்து அவசரமாக கிளம்பி, மதுசூதனனை போய் பார்த்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து, இருவருமே கடிதம் எதையும் வாங்கவில்லை. 
அ.தி.மு.க., விதிப்படி, அவைத் தலைவரை, கட்சியின் பொதுச் செயலரே நியமிக்க முடியும். பொதுச் செயலாளர் குறித்த வழக்கு, நீதிமன்ற நிலுவையில் இருக்கிறது. அவைத் தலைவராக இருக்கிறவர், தானாக விலகினால் அவரிடமிருந்து இருந்து கடிதம் வாங்கி அப்பதவிக்கு வேறு ஆளை நியமிக்கலாம். ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., தரப்பு அப்படி கடிதத்தை வாங்கி தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமித்தால், அது தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என நினைத்து தான், சசிகலா, மதுசூதனனை பார்க்க போயிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், சசிகலாவின் அரசியல் நகர்வுகள் அ.தி.மு.க-வுக்குள் புயலைக் கிளப்பிவரும் நிலையில், இந்தச் சந்திப்பு முத்தியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
