நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணைவீட்டுக்கு அடிக்கடி சென்று ஓய்வு எடுத்து வருவது வழக்கம் இவரது இளைய மகள் மருமகன் பேரன் தனிமையில் அந்த பண்னைவீட்டில் வசித்து வருகிறார்கள். பண்ணை வீடு செங்கல்பட்டு மாவட்டம் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் இபாஸ் வாங்கிக்கொண்டு அங்கே சென்றாரா என்கிற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தவாறே சொகுசு கார் ஒன்றை ஓட்டி செல்லும் போட்டோ இணையத்தில் வைரலாகியது. அதை கண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கி கேளம்பாக்கம் சென்றாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு E – Pass தேவை என்பது கட்டாயம். ஆனால் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் இ பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.