மேடை மொழிக்கு மீசை முளைத்தநாள். வெள்ளித் திரையில் வீரம் விளைத்தநாள். வள்ளுவ அய்யனை வையம் அறிந்தநாள்.


ஜூன் 3ம் நாளான இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் கருணாநிதி பிறந்த நாளை தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
Scroll to load tweet…

இதனையடுத்து கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஜூன் 3 கலைஞர் பிறந்தநாள். தமிழுக்கு ஏடு திறந்தநாள். தமிழர்க்குச் சூடு பிறந்தநாள். பகுத்தறிவுக்குப் பிள்ளை பிறந்தநாள். பழைமை லோகம் தள்ளிக் களைந்தநாள். மேடை மொழிக்கு மீசை முளைத்தநாள். வெள்ளித் திரையில் வீரம் விளைத்தநாள். வள்ளுவ அய்யனை வையம் அறிந்தநாள். வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்’’ எனத் தெரிவித்துள்ளார்.