பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாண்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அனுராதா தினகரன்.

சென்னை அடையாற்றில் டிடிவி தினகரன் வீடு அமைந்துள்ளது. இன்று மதியம் இவரது வீட்டு அருகே நின்றிருந்த இன்னோவா கார் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் கார் கண்ணாடிகள் தூள் தூளாகின. இதில் கார் டிரைவர் பாண்டிதுரை, புகைப்படக்காரர்  மற்றும் அந்த ஏரியாவில் சென்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் என மொத்தம் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த அனுராதா பயங்கரமாக சத்தம் கேட்டதால் அலறி வெளியில் ஓடிவந்த அனுராதா, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பற்றி எரிந்து கொண்டிருந்ததையும், கண்ணாடி நொறுங்கிய நிலையில் காரையும், பலத்த காயங்களோடு துடிதுடித்த டிரைவர் பாண்டியையும் பார்த்த அனுராதா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதனையடுத்து, கார்டிரைவரை உடனடியாக சிகிச்சைக்காக அபல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் அப்பல்லோவிற்க்கு கிளம்பிப்போன அனுராதா பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாண்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாண்டி கடந்த பத்து ஆண்டுகளாக தங்கள் வீட்டில் டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார். தங்களது குடும்பத்தின் மீது வைத்திருந்த விசுவாசம் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு அவரின் ஆர்ப்பரிப்பை கண்டு கண்கலங்கியுள்ளார் தினகரனின் மனைவி அனுராதா.