கடந்த சில நாட்களாக தினகரனின் வலது கையாக இருக்கும் செந்தில் பாலாஜி திமுகவில் இணையாவிருப்பதாக வந்த தகவல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. அதாவது நாளை காலை சரியாக 10:45  மணிக்கு திமுகவில் இணையவுள்ளார்.

கரூர் செந்தில் பாலாஜி அமமுகவை விட்டு வெளியேறும் தகவலால் ஒட்டுமொத்த தினகரன் குரூப்பையே கதிகலங்க வைத்திருக்கும்  நிலையில், மேலும் அமமுகவிற்கு அடுத்த ட்விஸ்ட் கொடுக்கும் கொடுத்திருக்கிறது செந்தில் பாலாஜியின் அரவக்குறிச்சி.

செந்தில் பாலாஜி திமுகவில் இணையவிருக்கும் சூழலில், அரவக்குறிச்சி ஒன்றிய அமமுக செயலர் மணிகண்டன் அதிமுகவில் இணைந்துள்ளார். வேங்கை ராமச்சந்திரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அனைவரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். 

காரணம் என்னவென்று கேட்டால்; செந்தில் பாலாஜி திமுகவுக்குப் போவது உறுதியானதும், கரூர் மாவட்டத்தில் அமமுகவில் இருந்த தொண்டர்கள் பலரும், நிர்வாகிகள் சிலரும் இன்று பிற்பகலில் அவசர அவசரமாக அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். 

செந்தில் பாலாஜியை நம்பித்தான் நாங்க தினகரன் கட்சிக்குப் போனோம். அவரு திடீர்னு திமுகவுக்கு போவாருன்னு நாங்க எதிர்பார்க்கலை. திமுகவை எதிர்த்தே நாங்க வளர்ந்துட்டோம். அவருக்கு வேணும்னா அங்கே செட் ஆகிடும். எங்களுக்கு திமுக ஒத்துவராது. 

அதுக்காக தினகரன் கட்சியிலும் தொடர முடியாது. எங்களுக்கு நல்லது கெட்டது எதுவா இருந்தாலும் செந்தில் பாலாஜிதான் பார்த்தாரு. அவரு போன பிறகு அந்தக் கட்சியில் யாரோடு பேசுறதுன்னுகூட எங்களுக்குத் தெரியல. அதனால அம்மா கட்சிக்கே போய்டலாம்னுதான் அதிமுகவுக்கு போயிட்டோம்.’ என்று சொல்லியிருக்கிறார்கள் அவசரமாக அணி மாறியவர்கள்.