முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடலுக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் மிக சோர்வுடன் அஞ்சலி செலுத்தும் காட்சிகள் அனைவரும் நெஞ்சை உருகு வைத்தன. வயது மூதிர்ச்சி காரணமாக திமுக தலைவர் ஓய்வில் இருந்து வந்தார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதி கடந்த 11 காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையில் திங்கள்கிழமை பின்னடைவு ஏற்பட்டது. 

இதையடுத்து கருணாநிதி உடல்நிலையை காண முதல் முறையாக தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வருகை தந்தார். கருணாநிதி செல்லும் சக்கர நாற்காலியில் தயாளு அம்மாளை அழைத்து செல்லப்பட்டார். இதனை கண்டதும் தொண்டர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் அவர் நேற்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி விண்ணுலகம் சென்றார். 

இதையடுத்து காவிரி மருத்தவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அருகே தயாளு அம்மாள் சிறிது நேரம் உட்கார வைக்கப்பட்டார். அப்போது கருணாநிதியை இனி எப்போது பார்ப்பேன் என்ற தோய்ந்த முகத்துடன் காட்சியளித்தது. இத்தனை நாட்கள் பல்வேறு சோதனைகளையும், சாதனைகளையும் சந்தித்த கருணாநிதி கண்ணாடி பெட்டிக்குள் இருக்கிறார் என்பதை பார்க்கும் தயாளு அம்மாளின் பார்வை ஆயிரம் சோகங்களை கூறுகிறது.