ஏழை, கிராமப்புற, நடுத்தர மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேராமல் தடுப்பதற்கான நுழையாத்தேர்வு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நீட் நுழைவுத்தேர்வு என்பது ஏழை, கிராமப்புற, நடுத்தர மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேராமல் தடுப்பதற்கான நுழையாத்தேர்வு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவினர் மருத்துவர்களாகி சேவை செய்து விடக்கூடாது என்ற வஞ்சக வெறித்தனம் வினாத்தாள் தயாரிப்பில் தெரிகிறது. 

 

முதுநிலை மருத்துவப் படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. வினாத்தாள் தயாரித்தவரே அத்தேர்வை எழுதியிருந்தால் கூட  20% வினாக்களுக்கு தவறான விடை தான் எழுதியிருப்பார்.  எப்படியோ நீட்டை உருவாக்கியவர்களின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது’’எனத் தெரிவித்துள்ளார்.