Asianet News TamilAsianet News Tamil

சரியான ஆப்பு.. இனி கோயில் நிலங்களை அபகரித்தால் குண்டர் சட்டம் தான்..!

மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில்அறங்காவலர் தற்காலிக நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ் சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. 

Detain temple land encroachers under Goondas Act,...chennai high court
Author
Tamil Nadu, First Published Sep 15, 2021, 4:25 PM IST

கோயில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில்அறங்காவலர் தற்காலிக நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ் சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. 

Detain temple land encroachers under Goondas Act,...chennai high court

அப்போது, அறங்காவலர் ஸ்ரீதரை தற்காலிகமாக நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளது.கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க விளம்பரங்கள் செய்ய வேண்டும். 

Detain temple land encroachers under Goondas Act,...chennai high court

கோயில் நிலத்தை அபகரித்தல் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும் மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கோயில் நிலம், சொத்து, நகையை மீட்கும் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். சிறப்பு பிரிவுக்கான தொலைபேசி, மொபைல் எண்களை கோயில் அலுவலகங்களில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios