என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

 

ரஜினி கட்சி துவக்குவாரா மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என ட்விட்டர் வாயிலாக, ரஜினி தெரிவித்து இருந்தார். அதன்படி, சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், ரஜினி இன்று காலை ஆலோசனை நடத்தினார். 

மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள் என ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசியலில் என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது; மக்களுக்காக உழைக்க வேண்டும். சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் நிர்வாகிகளை மாற்றக்கூடும். மக்கள் மனதில் எழுச்சியூட்டினால் மட்டுமே கட்சி ஆரம்பிப்பேன் எனத் தெரிவித்து இருந்தேன். ஆனால் நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

இப்படி இருந்தால் எப்படி மாற்றத்தை கொண்டு வரமுடியும்? பிறகு அரசியல் கட்சி ஆரம்பித்து தோற்றுப்போகவா? கட்சி தொடங்குவது? ஆகையல் நிர்வாகிகள் சரியாக உழைத்தால் கட்சி ஆரம்பிக்கலாம். இல்லையெனில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்கிறேன்’’ என ரஜினி நிர்வாகிகளிடம் கெடுபிடி காட்டியதாக கூறப்படுகிறது.