ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டி வரும் அமைச்சர் உதயகுமார் ஜெயலலிதா மரணம் குறித்து இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை என திருமங்கலத்தில் திமுக  தலைவர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியில் கட்சிகள் அதை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. யாருடன் கூட்டணி அமைப்பது என்ற வியூகங்களிலும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஜினி ஆரசியல் வருகையில் இருந்து பின்வாங்கியுள்ளதால். வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுக- திமுகவுக்கும் இடையே நேரெதிர் போட்டி நிலவும் சூழல் உள்ளது. 

எனவே அதிமுக-திமுக இரண்டு கட்சிகளுமே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கியும், விமர்சித்து வருகின்றன. இதனால் அரசியில் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில்  சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று மதுரை திருமங்கலத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வரும் அமைச்சர் உதயகுமார் ஜெயலலிதா மரணம் குறித்து இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை, ஆனால் கோவில் கட்டி வருகிறார். ஆனால் ஜெயலலிதா எப்படி மரணமடைந்தார் என்பதை இதுவரை யாருமே சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. ஜெ. மரணத்தில் சந்தேகம் கிளப்பியது துணை முதல்வர் தான். திமுக அல்ல. 

ஜெயலலிதாவுக்கும் திமுகவுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா. அவர் மருத்துவமனையில் இருந்த போது சரியான தகவல் வெளியிடப்படவில்லை. விசாரனை கமிஷன் 8 முறை அழைத்தும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அதில் ஆஜராகவில்லை, ஏன்.? ஜெயலலிதா மரணத்தில் உண்மை நிலவரம் திமுக ஆட்சியில் வெளி கொண்டு வரப்படும், கொரோனா காலத்தில் கூட கொள்ளை அடிக்கக் கூடிய ஆட்சி அதிமுக ஆட்சி,  இந்த அதிமுக ஆட்சியை நிராகரிப்போம் என பேசி தனது உரையை நிறைவு செய்தார்.