திருப்பூர் துரைசாமி தகுதியை இழந்துவிட்டார்.!பொறுப்பில் இருந்து நீக்குக!வைகோவிற்கு கடிதம் எழுதிய மாநில நிர்வாகி

மதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், கட்சிக்கு எதிராக செயல்படும் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என மாநில துணை பொதுச்செயலாளர் ஏகே மணி வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Deputy Secretary General letter to Vaiko demanding removal of Thirupur Duraisamy from his post

மதிமுக உட்கட்சி மோதல்

திமுகவின் வாரிசு அரசியலுக்கு எதிராக தொடங்கப்பட்ட மதிமுகவில், வைகோவிற்கு பிறகு கட்சியை வழிநடத்தும் வகையில் துரை வைகோவிற்கு தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக நிர்வாகிகள் குரல் எழுப்பினர். இதனையடுத்து அந்த மாவட்ட செயலாள்ரகள் கட்சியில் இருந்து ஈக்கப்பட்டனர். இந்தநிலையில் ம்திமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவிற்கு எழுதிய கடிதத்தில், மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே இலட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர்.

பொய்யான தகவல் அளித்த அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு..! இறங்கி அடிக்கும் டி ஆர் பாலு

Deputy Secretary General letter to Vaiko demanding removal of Thirupur Duraisamy from his post

மதிமுகவை திமுகவில் இணைக்கனுமா.?

ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த திமுகவில் பிரிந்துவந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி திமுகவிற்கே சென்று விட்டதாகவும், எனவே மதிமுகவை முழுமையாக திமுகவோடு இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளிக்கையில், இரண்டு வருடங்களுக்கு கட்சிக்கு வராமல் தற்போது திருப்பூர் துரைசாமி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்றால் நல்ல நோக்கத்திலா இருக்கும் என கேள்வி எழுப்பினார்.  கட்சியில் 99.9% பேருக்கு திமுகவோடு கட்சியை இணைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தமிழ்நாடு முழுவதும் இந்த உணர்வு தான் உள்ளது.  

Deputy Secretary General letter to Vaiko demanding removal of Thirupur Duraisamy from his post

துரைசாமியை நீக்குங்கள்

துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன் என கூறியிருந்தார். இந்தநிலையில் மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஏகே மணி, வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார். இவர் அவைத் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்பதால், அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் அவர்களைக் கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

விரைவில் அதிமுக ஆட்சி.! நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம், பாதுகாப்பு- இபிஎஸ் உறுதி
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios