Asianet News Tamil

கடைசி நேரத்தில் மனம் மாறிய மு.க.ஸ்டாலின்.. துணைப் பொதுச் செயலாளராகும் ஆ.ராசா... அப்ஷெட்டில் உதயநிதி..!

தனது தந்தைக்கு பிறகு திமுகவில் தனக்கு போட்டியாக இருப்பார்கள் என்று உதயநிதி கருதுவதால் தான் கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு பெரிய அளவில் எந்த பொறுப்புகளும் கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பொதுக்குழுவில் ஆ.ராசாவை துணைப் பொதுச் செயலாளர் ஆக்க உள்ளனர்.

deputy general secretary raja...udhayanidhi stalin upset
Author
Tamil Nadu, First Published Sep 9, 2020, 11:56 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தனது தந்தைக்கு பிறகு திமுகவில் தனக்கு போட்டியாக இருப்பார்கள் என்று உதயநிதி கருதுவதால் தான் கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு பெரிய அளவில் எந்த பொறுப்புகளும் கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பொதுக்குழுவில் ஆ.ராசாவை துணைப் பொதுச் செயலாளர் ஆக்க உள்ளனர்.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. பாஜகவின் ஆக்டோபஸ் கரங்களை மீறி திமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளார். அதனால் தான் தேர்தலுக்கு முன்னதாகவே திமுக நிர்வாகிகள் நியமனத்தில் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வருகிறார். துணைப் பொதுச் செயலாளராக இருந்த விபி துரைசாமி பாஜகவில் ஐக்கியமானது, ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் அதிருப்தியாளராக மாறியது போன்றவை ஸ்டாலினை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.

இதனை தொடர்ந்தே திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் நியமனத்தோடு துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் தகுதியானவர்களை நியமிக்க ஸ்டாலின் முடிவெடுத்ததாக சொல்கிறார்கள். திமுகவில் கலைஞருக்கு பிறகு பேச்சாற்றல் மிக்க நபராக இருப்பது ஆ.ராசா தான். திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து முழுவதுமாக விடுதலையாகி தன்னுடைய திறமையை நிரூபித்தவர் ஆ.ராசா. அதோடு மட்டும் அல்லாமல் நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுகள் பலரையும் கவரும் வகையில் இருந்தது.

விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி கவசம் விவகாரங்களில் திமுகவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அவதூறு பரப்பப்பட்டது. இதற்கு திமுகவில் யாராலும் சரியாக எதிர்வினை ஆற்ற முடியவில்லை. ஆனால் ஆ.ராசா நியுஸ் 7 தொலைக்காட்சிக்கு அளித்த ஒரே ஒரு பேட்டியின் மூலம் இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி கவச விவகாரங்களிலி ஆ.ராசா எழுப்பிய கேள்விகளுக்கு பாஜக தரப்பில் இருந்து யாராலும் பெரிய அளவில் பதில் அளிக்க முடியவில்லை.

இப்படி திமுகவின் இமேஜை காப்பாற்றக்கூடிய நபராக ஆ.ராசா வலம் வருகிறார். ஆனால் கலைஞர் காலம் தொட்டே அவருக்கு முக்கியப் பதவிகள் எதுவும் கிடைக்காமல் ஸ்டாலின் தரப்பு பார்த்துக் கொண்டதாக ஒரு புகார் உண்டு. வெறும பேச்சாளராக மட்டும் இல்லாமல் செயல் வீரராகவும் ஆ.ராசா அறியப்பட்டவர். எனவே தான் அவருக்கு பதிலாக டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி போன்றோர் அண்ணா அறிவாலயத்தில் கோலோச்ச அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் தடுமாறுவதை எல்லாம் பார்த்து ஊரே சிரித்தாலும் ஸ்டாலின் கண்டுகொள்வதில்லை.

இந்த விஷயங்களுக்கு ஆ.ராசாவை பதில் அளிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே  ஆ.ராசா புகழ் பாட ஆரம்பித்தனர். இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பதவியில் தலித்தான ஆ.ராசாவை நியமிக்க வேண்டும் என்றும் பேச்சுகள் அடிபட்டன. இதனால் பதறிப்போன ஸ்டாலின் தரப்பு அவசர அவசரமாக துரைமுருகன், டி.ஆர்.பாலுவை கட்சியின் சீனியர்கள் என்று கூறி அந்த பதவிகளில் நியமித்தார். அதே சமயம் ஆ.ராசாவுக்கு முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள்மட்டும் எழுந்து கொண்டே இருந்தன. ,

எனவே தான் உதயநிதி விரும்பவில்லை என்றாலும் கூட வேறு வழியில்லை என்பதால் மனம் இறங்கிய ஸ்டாலின் ஆ.ராசாவுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்ததாக சொல்கிறார்கள். இந்த பதவி திமுகவின் அடுத்தகட்டத்திற்கு ஒருவரை அழைத்துச் செல்லும் பதவியாக கருதப்படுகிறது. காரணம் ஸ்டாலினும் சரி, துரைமுருகனும் சரி துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்தவர்கள் தான்.

Follow Us:
Download App:
  • android
  • ios