Asianet News TamilAsianet News Tamil

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.!

வருமானத்திற்கு அதிகமாக ரூ.70 கோடி சொத்து குவித்த தெலுங்கானா காவல் துணை ஆணையரை போலீசார் கைது செய்தனர்.

Deputy Commissioner arrested for adding property in excess of income
Author
Telangana, First Published Sep 24, 2020, 10:08 PM IST

வருமானத்திற்கு அதிகமாக ரூ.70 கோடி சொத்து குவித்த தெலுங்கானா காவல் துணை ஆணையரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் மல்காஜ்கிரி பகுதி காவல் இணை ஆணையராக பணியில் இருப்பவர் நரசிம்மா ரெட்டி.
நரசிம்மா ரெட்டி அரசியல் பிரபலங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

Deputy Commissioner arrested for adding property in excess of income

இதன் மூலம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் நிஜாம் நவாப்புகளுக்கு உரிய சொத்துக்கள் உட்பட ஏராளமான அளவில் சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதாக தெலுங்கானா மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் மல்காஜ்கிரியில் அவருக்கு சொந்தமாக இருக்கும் வீடு உட்பட, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் ஆகியவை உட்பட 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையில் அவர் நான்கு சொகுசு வீடுகள், இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் ஆகியவற்றை வாங்கி குவித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் பத்திரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர்.மேலும் அவருடைய வீட்டில் இருந்த 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், தங்க ஆபரணங்கள்,  ஃபிக்சஸடு டெப்பாசிட் பத்திரங்கள் ஆகியவை உட்பட சுமார் 70 கோடி ரூபாய்க்கான பொருட்கள் ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக துணை ஆணையர் நரசிம்ம ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios