Asianet News TamilAsianet News Tamil

தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு..! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜனவரி 31-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. 

Denial of permission to vote for DMDK candidate Anand..!
Author
First Published Feb 27, 2023, 8:25 AM IST

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் காவல் நிலையம் எதிரே உள்ள வாக்கு சாவடியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி துண்டுடன் வாக்களிக்க வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜனவரி 31-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. 

இதையும் படிங்க;- ஈரோடு கிழக்கில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்..? இதுவரை வென்ற கட்சிகள் எது..?

Denial of permission to vote for DMDK candidate Anand..!

அதைத் தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து திமுக கூட்டணி சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Denial of permission to vote for DMDK candidate Anand..!

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கும், தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி துண்டுடன் கருங்கல்பாளையம் அக்ரஹாரம் மஜூத் வீதியில் உள்ள பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்ய வந்திருந்தார். அப்போது,  கட்சி துண்டை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தியதை அடுத்து கட்சி துண்டை அகற்றிவிட்டு வாக்களித்தார். 

இதையும் படிங்க;-  அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமென்று தீர்ப்பில் சொல்லவில்லை.. இபிஎஸ்ஐ அலறவிடும் கே.சி.பழனிசாமி..!

Denial of permission to vote for DMDK candidate Anand..!

இதனையடுத்து,  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தேர்தலில் எனது ஓட்டை பதிவு செய்துள்ளேன். இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் வாக்கை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எந்த வேலை இருந்தாலும் கூட தேர்தலில் ஓட்டளிப்பது என்பது மிக முக்கியம். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios