Asianet News TamilAsianet News Tamil

ஈரோடு கிழக்கில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்..? இதுவரை வென்ற கட்சிகள் எது..?

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் என 77பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16,497 பேர் மூன்றாம் பாலினத்தினர் 25 பேர் மொத்தமாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். 

Which parties have contested and won elections in Erode East constituency so far ?
Author
First Published Feb 27, 2023, 7:58 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதியின் வரலாறு

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி தனது முதல் தேர்தலை 2011ஆம் ஆண்டு சந்தித்தது. அப்போது ஆளும்கட்சியாக இருந்த திமுகவிற்கு எதிராக தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதன் காரணமாக தேமுதிகவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் முன்னணி நிர்வாகியாக அப்போது இருந்த வி.சி. சந்திர குமார் போட்டியிட்டார். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ். முத்துசாமி களம் இறங்கினார். கடும் போட்டி நிலவிய இந்த தொகுதியில் சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 10 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் முத்துசாமி வெற்றி வாய்ப்பை இழந்தார். 

ஒற்றை தலைமை தீர்ப்புக்கு பின் அதிரடியாக களத்தில் இறங்கும் இபிஎஸ்.!அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

Which parties have contested and won elections in Erode East constituency so far ?

வெற்ற பெற்ற கட்சி எது.?

இதனையடுத்து அதிமுக- தேமுதிக இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கூட்டணி உடைந்தது. இதனையடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவியது. தேமுதிக மக்கள் நல கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக சார்பில் தென்னரசு களம் இறக்கப்பட்டார். தேமுதிகவில் இருந்து விலகிய சந்திரகுமார் திமுக சார்பாக போட்டயிட்டார். இதில் சுமார் 10 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரகுமார் தோல்வி தழுவினார். இதனையடுத்து நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா களமிறக்கப்பட்டார்.

Which parties have contested and won elections in Erode East constituency so far ?

அதிமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு  ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் இளைஞரணித் தலைவர் யுவராஜா களமிறங்கினார். இந்தத் தேர்தலில் கை சின்னமும், இரட்டை இலை சின்னமும் போட்டியிட்டது. இதில் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். யுவராஜா 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று சுமார் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் அடைந்தார்.

Which parties have contested and won elections in Erode East constituency so far ?

தற்போதைய வேட்பாளர்கள் யார்

இந்தநிலையில் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு களம் இறங்கியுள்ளார். திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கவனும், தேமுதிக சார்பாக ஆனந்தும், நாம் தமிழர் சார்பாக மேனகா உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். 

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமென்று தீர்ப்பில் சொல்லவில்லை.. இபிஎஸ்ஐ அலறவிடும் கே.சி.பழனிசாமி..!

Follow Us:
Download App:
  • android
  • ios