Demonstration led by Vijayakanth
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் தேமுதிக
தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22 ஆம் தேதி அன்று 100-வது நாளாக போராட்டம நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழகம்
முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம்
நடததினார். அப்போது அவர் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதேபோன்று மதுரை, டெல்லி ஆகிய இடங்களிலும் தேமுதிக தொண்டர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு மத்திய - மாநில அரசுகள்
பொறுப்பேற்க வேண்டும் என்றார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறினார்.
