Asianet News TamilAsianet News Tamil

டெல்லி ஸ்டாராகும் ஸ்டாலின்... வெளிச்சம் மங்கும் கனிமொழி... ஜெயிச்சாலும், தோத்தாலும் நான் டம்மிதான்..!

வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ஸ்டாலின் டெல்லி செல்கிறாராம். சோனியா, ராகுல் நடத்தும் ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக சில நாட்கள் அங்கேயே தங்குகிறாராம். வாக்கு எண்ணிக்கை நடந்து, ரிசல்ட் வெளியாகும் நாளில் கூட ஸ்டாலின் அங்கேதான் இருப்பார்! என்று தகவல்.

Delhi Star is MK Stalin
Author
Tamil Nadu, First Published May 11, 2019, 1:41 PM IST

கருணாநிதியின் டெல்லி பிரதிநிதியாக இருந்தவர் முரசொலி மாறன். அவர் மறைவுக்குப் பின் தயாநிதி மாறனை அந்த இடத்துக்கு கொண்டு முயன்றார். ஆனால் குடும்பத்தின் உள் பஞ்சாயத்துகளால் அது முழுமையாக நிறைவேறாமல் போனது. ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லியில் கிட்டத்தட்ட செட்டிலான கனிமொழி, தங்கள் கட்சிக்காக சைலண்டாக பல அரசியல் மூவ்களை மேற்கொண்டார். அது ஓரளவு கைகொடுத்தாலும் கூட, அவர் மீதான வழக்குப் பாய்ச்சலும், சிறைவாசமும் கனியின் டெல்லி அரசியலை முடக்கின. 

இதன் பிறகு டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோ தி.மு.க.வின் டெல்லி பிரதிநிதிகளாக வெறும் ஃபில்லர்களாக பயன்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கருணாநிதியின் மறைவு நிகழ்ந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வைபரேஷன் துவங்கியது. சோனியா, ராகுலிடம் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அழைப்பிதழை வழங்குவதற்காக டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு அந்த விசிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட நாளில் இருந்து ராகுலும், ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்களாகினர். Delhi Star is MK Stalin

அதன் தொடர்ச்சியாக 5 மாநில தேர்தல்களில் பெரும்பான்மை மாநிலங்களை காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்த விழாக்கள், கொல்கத்தாவில் மம்தா நடத்திய ஆலோசனை கூட்டம் என்று ஸ்டாலினின் கொடி வட இந்தியாவில் பட்டொளி வீசி பறந்தது. ஸ்டாலினுக்கு வட இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளிடம், குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களிடம் நெருங்கிய ரேப்போ உருவானது. ‘பிரசார நாட்கள் குறைவாக இருப்பதால் தமிழகத்துக்கு அதிகம் நீங்கள் வரவேண்டாம். ஸ்டாலினே போதும்.’ என்று சிதம்பரம் உள்ளிட்டோர் ராகுலிடம் கோரிக்கை வைக்குமளவுக்கு ஸ்டாலினின் ஆளுமை உயர்ந்தது. Delhi Star is MK Stalin

இந்நிலையில், இதோ இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது நாடாளுமன்ற தேர்தல். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ஸ்டாலின் டெல்லி செல்கிறாராம். சோனியா, ராகுல் நடத்தும் ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக சில நாட்கள் அங்கேயே தங்குகிறாராம். வாக்கு எண்ணிக்கை நடந்து, ரிசல்ட் வெளியாகும் நாளில் கூட ஸ்டாலின் அங்கேதான் இருப்பார்! என்று தகவல். தங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றி கிடைத்தால், சென்னைக்கு பறந்து வந்து தனது மகிழ்வை, நன்றியை பதிவு செய்துவிட்டு செல்வாராம். 50/50 எனும் நிலை என்றால், டெல்லியிலிருந்தே நன்றி சொல்லிவிட்டு, புதிதாய் மத்தியரசு அமையும் முயற்சிகள், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அசைக்கும் நிலைப்பாடுகள் ஆகியவற்றில் பிஸியாவார்! என்கிறார்கள். Delhi Star is MK Stalin

டெல்லி சென்று தங்க இருக்கும் ஸ்டாலினுக்காக, சந்திரபாபு நாயுடு போல் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் அறை புக் செய்யப்பட்டுவிட்டதாம். ஸ்டாலினுக்காக தொடர்ந்து பணிவான அழைப்புகள் டெல்லியிலிருந்து வந்து கொண்டே உள்ளனவாம். இந்நிலையில், அண்ணன் தமிழக அரசியலை கவனித்துக் கொள்ள, தான் டெல்லியில் பெரியளவில் தலையெடுக்கலாம்! என்று நினைத்த கனிமொழிக்கு இந்த விஷயங்கள் பெரும் அதிர்ச்சியையும், பின்னடைவையும் கொடுத்துள்ளன. ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து, தான் மத்தியமைச்சர் ஆனாலும் கூட ஸ்டாலினே டெல்லியிலும் கோலோச்சுவார்! ஜெயிச்சாலும் தோத்தாலும் தன் நிலை டம்மி தான் போல! என்று மனம் நொந்துகிடக்கிறாராம் கனி.

Follow Us:
Download App:
  • android
  • ios