ஆட்சி பீடத்தில் டெல்லி மக்கள் தாமரையை வைக்காமல் விளக்குமாறை வைத்துள்ளனர் என  தமிழக பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 21 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க;- அமமுகவின் செல்வாக்கான நிர்வாகியை சைலன்டாக தட்டித்தூக்கிய செந்தில்பாலாஜி... தினகரனை மண்டை காய விடும் திமுக..! 

தொடக்க முதலே பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வந்தது. தற்போது நிலவரப்படி ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாஜக 08 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 53.6 சதவீத வாக்குகளும், பாஜக 40.02 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.45 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க;- தலைநகர் டெல்லியில் பாஜகவை தலைத்தெறிக்க ஓடவிட்ட ஆம் ஆத்மி... கெத்து காட்டும் கெஜ்ரிவால்..!

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான இல.கணேசன்;- ராஜ்ஜிய லஷ்மி என்று கூறப்படும் ஆட்சி பீடத்தில் டெல்லி மக்கள் தாமரையை வைக்காமல் விளக்குமாறை வைத்துள்ளனர். இது பாஜகவிற்கு பின்னடைவு என்று சொல்லமுடியாது. கடந்த தேர்தலோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கெஜ்ரிவால் அறிவித்த இலவச தேர்தல் திட்டங்களுக்கும் பாஜக அறிவித்த தேர்தல் திட்டங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை பாஜக பெற்றுள்ளது என்றார்.