Asianet News TamilAsianet News Tamil

2446 தப்லீக் ஜமாத்தியர்களை விடுவிக்க கெஜ்ரிவால் எடுத்த ரிஸ்க்..!! இழுபறிக்குப் பின்னர் அதிரடி முடிவு..?

ஒரு மாதத்திற்கு மேலாகியும் கொரோனா பாதிப்பில்லாத தப்லீக் உறுப்பினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை ,  இவர்களை விடுவிப்பது தொடர்பாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு உள்துறை அமைச்சகத்துக்கு இரண்டு முறை கடிதம் எழுதியது . 

Delhi cm arawing gejriwal decided to release thablic jamath members
Author
Delhi, First Published May 11, 2020, 11:35 AM IST

உள்துறை அமைச்சகத்தின் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது .  நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரை இந்தியாவில் 67 ஆயிரத்து  259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரை 2212 பேர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 20 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் ,  ஆனால் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டே செல்கிறது,   இந்நிலையில் டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையிலும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 3 ஆயிரம்  பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் இப்பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இரண்டு வாரங்களாக போராடி வந்த டெல்லி அரசு தற்போது இந்தியாவை சேர்ந்த 2500 பேரை வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.

Delhi cm arawing gejriwal decided to release thablic jamath members

டெல்லியில் நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டம்தான் நாடு முழுவதும் கொரோனா பரவுவதற்கு காரணம் என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளால் குற்றம்சாட்டப்பட்டது .  இதுதொடர்பாக டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த ஜமாத் உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது ,  பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த தப்லீக் ஜமாத்தின் சில உறுப்பினர்கள் விசா நிபந்தனைகளை மீறியதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டனர் முன்னதாக நிஜாமுதீனிலுள்ள மார்க்கஸ் மசூதியிலிருந்து சுமார் 2 ஆயிரத்து 346 பேரை மத்திய அரசு வெளியேற்றியது .  அவர்களில் 636 பேர் மருத்துவமனைகளுக்கும் மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர் .  ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் கொரோனா பாதிப்பில்லாத தப்லீக் உறுப்பினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை ,  இவர்களை விடுவிப்பது தொடர்பாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு உள்துறை அமைச்சகத்துக்கு இரண்டு முறை கடிதம் எழுதியது . 

Delhi cm arawing gejriwal decided to release thablic jamath members

தப்லீக் ஜமாத்தை சேர்ந்த 3 ஆயிரம் உறுப்பினர்கள் பாதிப்பு இல்லாத நிலையிலும் 21 நாட்களுக்கு மேலாக டெல்லியின் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் அவர்களை விடுவிப்பதில் மேற்கொள்ளவேண்டிய வழிகாட்டு தகவல்கள் மற்றும் நெறிமுறைகளை விரைவில் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதங்களில் கோரப்பட்டது , ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் முறையாக பதில் எதையும் தெரிவிக்கவில்லை டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அந்த 3 ஆயிரம் பேரிடம் காவல்துறையினர் விசாரணை எதுவும் மேற்கொள்ள வேண்டி இருந்தால் தாராளமாக மேற்கொள்ளலாம் என்றும் மற்றபடி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட தப்லீக் உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் . 

Delhi cm arawing gejriwal decided to release thablic jamath members

ஆனால் அதற்கும் பதில் இல்லை இந்நிலையில்தான் வெளிநாடுகளைச் சேர்ந்த  தப்லீக் உறுப்பினர்கள் 167 பேர் தவிர மீதமுள்ள இந்தியாவை சேர்ந்த இரண்டாயிரத்தி 446 பேரை வீடுகளுக்கு அனுப்பி வைக்க  டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது .  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்கப்படும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் வீடுகளைத் தவிர மசூதிகள் உட்பட வேறு எந்த இடத்திலும் தங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது . 

 

Follow Us:
Download App:
  • android
  • ios