Asianet News TamilAsianet News Tamil

பாடப் புத்தகத்தில் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம்.. அதை நாங்க செய்யல.. லியோனியின் விளக்கம் இதுதான்..!

திமுக ஆட்சிக் காலத்தில் பாடப் புத்தகங்களில் தமிழ் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டதா என்பது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
 

Deletion of caste names of scholars in the textbook.. Let's do it.. This is Leoni's explanation ..!
Author
Chennai, First Published Aug 5, 2021, 9:56 PM IST

2021-22 கல்வியாண்டில் தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாட நூல் ஆசிரியர் பெயர், சான்றோர் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் பலரின் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தனியார் தொலைக்காட்சிக்கு  அளித்துள்ள பேட்டியில், “தமிழ் அறிஞர்களின் பெயர்களில் சாதி பெயர்கள் நீக்கப்பட்டதாக வெளியான செய்தியை அறிந்து, ஒவ்வொரு பாடநூலாக நான் எடுத்து ஆய்வு செய்து பார்த்தேன்.Deletion of caste names of scholars in the textbook.. Let's do it.. This is Leoni's explanation ..!
ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என்ற பெயர் நாமக்கல் ராமலிங்கனார் என்று உள்ளது. 12-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உ.வே.சாமிநாத ஐயர் என்ற இடத்தில் உ.வே.சாமிநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 9-ஆம், வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்ற பெயர் மனோன்மணியம் சுந்தரனார் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இதெல்லாம் கடந்த 2019-ஆம் ஆண்டில் புத்தகங்கள். அதில் மாற்றப்பட்டுள்ளன. அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். பாடநூல் கழக தலைவராக இருந்தவர் வளர்மதி. அவர்களின் காலத்தில்தான் எஸ்சிஇஆர்டிக்குப் பரிந்துரை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.Deletion of caste names of scholars in the textbook.. Let's do it.. This is Leoni's explanation ..!
இது ஒரு புதிய செய்தியே அல்ல. திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நடந்ததுபோலத் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் உண்மையில்லை. இந்த மாறுதல் தொடருமா என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், முதல்வர் ஆகியோர் முடிவெடுப்பார்கள். திமுக ஆட்சிக் காலத்தில் இத்தகைய குழப்பங்கள் இல்லாமல் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும்” என்று லியோனி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios