சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 அவர் குணம் அடைந்து வெளியே வர இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சசிகலா வருகிற 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக இருப்பதாக கூறப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் தொடர்ந்து 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் விடுதலையாவதில் தாமதம் ஆக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “27-ம் தேதி சசிகலா விடுதலையாகும் பட்சத்தில் அவரிடம் கையெழுத்து பெற்று அவரது உடைமைகளை நாங்கள் ஒப்படைக்க வேண்டும். தற்போது அவர் கொரோனா வார்டில் சிகிச்சையில் உள்ளதால் இதுபற்றி சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய உள்ளோம்” என்று தெரிவித்தனர்.