Asianet News TamilAsianet News Tamil

மாறி மாறி குற்றம்சாட்டுவதை நிறுத்திவிட்டு வேலைய பாருங்க.. மத்திய, மாநில அரசுக்கு எதிராக கொதிக்கும் டிடிவி..!

மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை தாமதப்படுத்தி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். 

Delay in setting up AIIMS hospital.. TTV Dhinakaran Condemnation
Author
Madurai, First Published Jul 1, 2021, 4:03 PM IST

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி, ஆண்டுக்கணக்கில் ஆனபிறகும் அடிப்படையான  பணிகளைக்  கூட இன்னும் தொடங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபப்டும் என்று கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை அப்போதைய தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

Delay in setting up AIIMS hospital.. TTV Dhinakaran Condemnation

ஆனால், தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை தாமதப்படுத்தி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Delay in setting up AIIMS hospital.. TTV Dhinakaran Condemnation

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை தாமதப்படுத்தி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி, ஆண்டுக்கணக்கில் ஆனபிறகும் அடிப்படையான  பணிகளைக்  கூட இன்னும் தொடங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

 

 

இதன் பிறகும் இழுத்தடிக்காமல், திட்ட வரைவு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை  விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய , மாநில அரசுகளைக்  கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios