Asianet News TamilAsianet News Tamil

கடன் கட்ட தாமதம்... வீட்டிற்கே சென்று அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்... விவசாயி தற்கொலை..!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறிய விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Delay in paying the loan ... Bank employees who went home and humiliated ... Farmer commits suicide
Author
Tamil Nadu, First Published Sep 11, 2021, 5:47 PM IST

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறிய விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

குளித்தலை அருகே 38 வயதான விவசாயி வடிவேல் என்பவர் டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தி திட்டியதால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.Delay in paying the loan ... Bank employees who went home and humiliated ... Farmer commits suicide

இவர் கடந்த சில மாதங்களாக டிராக்டருக்கு வாங்கிய கடனின்  மாதத் தவணை தொகையை உரிய நேரத்தில் செலுத்தி வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக நிதிச்சுமையால் மாதத் தவணையை கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடிவேல் வீட்டிற்கே சென்ற வங்கி ஊழியர்கள் முறையின்றி வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி இருக்கிறார்கள். 

அத்தோடு கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் டிராக்டரை பறிமுதல் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த வடிவேல், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தான், வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் வடிவேல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Delay in paying the loan ... Bank employees who went home and humiliated ... Farmer commits suicide

இதையடுத்து, விவசாயி வடிவேலின் உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios