மேகதாது அணை விவகாரம், குட்கா ஊழல் உள்பட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி திமுக சார்பில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி, பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும். காவல்துறை உயர் அதிகாரிகளும் தொடர்புள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என திமுகவினர் கோஷமிட்டனர்.

இதுதொடர்பாக, வழக்கறிஞர் துரை பெரியசாமி என்பவர் , பெரம்பலூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.