Asianet News TamilAsianet News Tamil

ஸ்கெட்ச் போட்ட முதல்வர்... தப்பித்த டிடிவி.தினகரன், ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி.தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Defamation Case... Interim Prohibition dinakaran, stalin
Author
Tamil Nadu, First Published Jul 12, 2019, 5:21 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி.தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் தொடரப்பட்டது. Defamation Case... Interim Prohibition dinakaran, stalin 

அதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரூரில் நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான பொதுக்கூட்டத்தில் முதல்வர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. Defamation Case... Interim Prohibition dinakaran, stalin 

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், மற்றும் டிடிவி. தினகரன் சார்பாக, அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராக விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி.தினகரன் மீதான வழக்கு விசாரணை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், 4 வாரத்திற்குள் தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios