deepa went to police station for acar driver raja

முக்கிய நபர் கைது...! தீபா காவல் நிலையத்தில் தர்ணா..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா,அதாவது எம்ஜிஆர் அம்மா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா,காவல் நிலையம் சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

தீவாவின் கார் ஓட்டுனராக இருந்த ராஜா நேற்று திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ராஜாவை நீண்டகால நண்பர் என கூறிய தீபா....!

பல ஆண்டு காலமாக தனது கார் ஓட்டுனராக இருந்த ராஜா, தன்னுடைய நீண்ட கால நண்பர் என்று கூறி வந்தார்.இதனை தொடர்ந்து எம்ஜிஆர் அம்மா பேரவையில் கூட சில முக்கிய பொறுப்பை கொடுத்தார் தீபா.

இதனை தொடர்ந்து தீபாவிற்கும், கணவர் மாதவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனி கட்சி தொடங்கினார் மாதவன்.

பின்னர் தீபாவுடன் இணைந்துவிட்டதாக மாதவன் அறிவித்தார்.

திடீரென ராஜாவை எம்ஜிஆர் அம்மா பேரவையில் இருந்து நீக்குவதாக தீபா சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று முன் தினம் ஓட்டுனர் ராஜாவை சென்னை தி.நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.இதனை அறிந்த தீபா,நேராக காவல் நிலையத்திற்கு சென்று போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.