தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திடீரென தோன்றி பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார் தீபா.
அரசியலில் நல்ல முடிவெடுப்பார் என்ற நிலையில் அந்தர் பல்டி அடித்து தலைகீழாக முடிவெடுத்துள்ளார் தீபா.
இது அவருக்கு முன்னேற்றத்தை தருமா? - ஒரு அலசல்....
தமிழக அரசியலில் 1973ஆம் ஆண்டு 1993ஆம் ஆண்டு பிரபலமானது.
1973ல் திராவிட முன்னேற்ற கழகம் எம்ஜிஆருடைய வெளியேற்றத்தால் இரண்டாக பிளவுபட்டது.

கூத்தாடிதானே அவரென்ன சாதிக்க முடியும்.. விசிலடிச்சான் குஞ்சுகள்தான் அவர் பின்னால் போவார்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்த திமுகவினர் அதன் பலனை பின்வரும் காலங்களில் அனுபவித்தனர்.
1989 வரை திமுகவை தலை தூக்க விடாமல் எம்ஜிஆர் துவங்கிய அதிமுக தலை தூக்கி நின்றது.
இதே போன்றொதொரு பிளவை 1993ல் திமுக சந்தித்தது. அப்போது அதற்கு காரணமாக அமைந்தவர் வைகோ.
திமுகவில் 50%க்கு மேல் மாவட்ட செயலாளர்கள் அப்போது அவர் பின்னால் சென்றனர்.

தொடர்ச்சியாக வைகோ எடுத்த தவறான முடிவினால் அவர் பின்னால் சென்றதில் 90% பேர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பினர்.
சிலர் வேறு கட்சிக்கே தாவினர்.
1996ஆம் ஆண்டு அதிமுகவிற்கு எதிராக நாடே திரண்டு நின்றது.
அப்போது புத்திசாலிதனமாக கூட்டணி அமைத்து அதை அறுவடை செய்யாமல் நானே அடுத்த முதல்வர் என்று கூறி 200 தொகுதிகளில் வைகோ போட்டியிட்டார்.
இதை சாதகமக்கி கொண்ட கருணாநிதி சரியான முடிவெடுத்து வெற்றி பெற்று முதல்வரானார்.
அதன் பின்னரும் வைகோ அரசியலில் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்காமல் சூழ்நிலைக்கு எதிரான நேர்மறையான முடிவெடுத்தால் அரசியலில் செல்லாக்காசாகி போனார்.

ஜெ மரணத்துக்கு பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபாவை தொண்டர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.
ஜெயல்லைதவை போன்று சாயல் மட்டுமே இருந்ததே தவிர அவரது மொழி வளம், அரசியல் அறிவு, தமிழில் பேசும் திறமை தீபாவுக்கு துளியும் கிடையாது.
அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்றவர் ஜெயலலிதா.சாதாரண விஷயத்தை கூட கருத்து தெரிவிக்காமல் ஓடி ஒதுங்குபவர் தீபா.
அரசியலில் முன்னுக்கு வர வேண்டுமென்றால் சுறுசுறுப்பு துணிவு, ஆழ்ந்த அரசியல் ஞானம் போன்றவை அவசியம் வேண்டும்.
இவைகளை பல ஆண்டு பாடமாக படித்து அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா.

அரசியல் பற்றியே தெரியாமல் அத்தையின் மரணத்தை மட்டுமே அரசியலுக்கு வந்தவர் தீபா.
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் வெளிவந்தவுடன் தீபாவுக்கு சற்று இறங்குமுகமாக இருந்தது.
அதே நேரம் திடீரென ஓபிஎஸ்சுடன் கைகோர்த்தார் தீபா.
இருவரும் இணைந்து பிரச்சாரத்துக்கு செல்லவுள்ளதாக அறிவித்தார்.
இதனால் மக்களிடையே ஆதரவு கூடியது.

ஆனால் ஜெ பிறந்தநாளன்று ஒரே மேடையில் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் தீபா தான் தனியாக இயங்குவதாக அறிவித்தார்.
தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று துவங்கி கொடியையும் அறிமுகபடுத்தினார்.

ஓபிஎஸ்சுடன் இணைந்து தமிழகத்தில் சுற்றுபயணம் செய்து அரசியலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் தன்னிச்சையாக தீபா முடிவெடுத்தது அரசியலில் அவருக்கு பெரும் பின்னடைவே கிடைக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வைகோ முக்கியமான காலகட்டங்களில் தவறான முடிவெடுத்து ஒன்றுமில்லாமல் போனது போல் தீபாவின் நிலைமையும் மாறபோகிறது என்று பொதுமக்கள் தரப்பில் பேச்சு எழுந்துள்ளது.
