புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஜெ.தீபா ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாளை விழா கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கும், அவரது சிலைக்கும் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெ.தீபாவின் ஆதரவாளர்கள் இன்று காலையில் மாலை அணிவிக்க சிலர் வாகனங்களில் வந்தனர். அவர்களை அப்பகுதியில் மாலை அணிவிக்க வரவிடாமல் அதிமுகவினர் அடித்து விரட்டினர்.

மேலும் புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த தீபா பேரவை ஆதரவு பேனர்களையும் அகற்றினர். சாலையில் சென்ற பொதுமக்களையும் மிரட்டி எச்சரித்துக்கொண்டியிருந்தனர்.

இதனைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களையும், தனியார் தொலைக்காட்சி நிருபர்களையும் காவல் துறையினர் மிரட்டி அனுப்பி வைத்தனர். அதிமுகவினர் பேருந்து நிலையம் அருகிலும், எம்.ஜி.ஆர் சிலை அருகிலும் தீபா ஆதரவாளர்கள் நகருக்குள் வரவிடாமல் ஆங்காங்கே நிற்பதால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவிவருகிறது.
