அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அக்கட்சியின் சில தொண்டர்கள் தீபா பேரவை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளனர்.

முறைப்படுதப்படாத இந்த அமைப்புக்கு யார் தலைவர்? யார் செயல்படுத்துகிறார்? என்று தெரியாமல் தன்னிச்சையாக கிளம்பி தீபாவை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீபா ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் சென்னை நங்கநல்லூரில் உள்ள KCT திருமண மணடபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கபட்டிருந்ததால் உஷாராகி விட்டனர் அதிமுகவினர்.

உடனடியாக செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து KCT மண்டபத்திற்கு கொடுக்கபட்ட அட்வான்சை தீபா ஆதரவாளர்களிடம் திருப்பி கொடுக்க வைத்துவிட்டனர்.

இன்று KCT  மண்டபத்தில் 5000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள என தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் சுமார் 2000 பேர் அங்கு கூடியிருந்தனர்.

மண்டபதிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்த தீபா ஆதரவாளர்கள் சாலையிலேயே கூட்டத்தை நடத்த போவதாகவும் யார் வந்து தடுக்க போகிறார்கள் எனவும் சவால் விட்டனர்.

தொடர்ந்து அங்கு குழுமியிருந்த நூற்றுக்கனக்கானவர்கள் சாலையிலே ஒன்று கூடி தங்களது கூட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றினர்.

அதில் தீபா கூறியிருந்தபடி எம்ஜிஆர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என்றும் தீபா தலைமையில் செயல்படுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தனர்

எது எப்படியோ.. அட்வான்ஸ் பணம் திருப்பி தரப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சியிலிருந்து தீபா பேரவையினருக்கு நெருக்கடி ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை.