இந்த மேஜர் சுந்தர் ராஜன் இருந்தாரே! அவரை தெரியுமா உங்களுக்கு? யெஸ், அவரேதான். தமிழ் சினிமா நடிகரான அவர், இங்கிலீஸ்ல ஒரு டயலாக்கை சொல்வாரு அப்புறமா அதை அவரே தமிழ்ல்ல மொழிபெயர்த்தும் சொல்வாரு. இல்லேன்னா மொதல்ல தமிழ்ல சொல்லிட்டு அப்பாலிக்க இங்கிலிபிஸ்ல அதையே சொல்லி பார்க்கிறவனை கொலையா கொல்லுவாரு. 

கிட்டத்தட்ட அதே வேலையைத்தான் நம்ம பேபிம்மா @ தீபாம்மா கோஷ்டியும் பண்ணி வெச்சுட்டிருக்காங்க. அதுவும், அவனவன அழ வைக்கிற ஸ்டெர்லை விவகாரத்துலதான் இந்த கூத்து அப்படிங்கிறதுதான் ஹைலைட்டே. 

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடிட சொல்லி நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்து, பேபிம்மா டீம் டிஸைன் செய்துள்ள சிறிய நோட்டீஸ் இப்போது சென்னையை ஆங்காங்கே சந்து பொந்துகளில் தெறிக்க விட்டுள்ளது.
அதில்...

“தூத்துக்குடி மக்களை காக்க 
நீதி அரசரே! மண்டியிடுகிறோம்!!
ஸ்டெர்லைட்டை மூடிடுக!!!" 
என்று அந்த நோட்டீஸின் மேற்புறம் தமிழில் பிரிண்ட் செய்துள்ளனர். (இதில் ‘தூத்துக்குடி’ எனும் பெயரை ‘தூத்துகுடி’ என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு அச்சடித்து கேவலப்படுத்தியுள்ளது தனி கதை).

பின் அந்த தமிழ் வாக்கியங்களுக்கு கீழே...
“I Pray Your Lordship May Kindly
BAN STERLITE
To Save Tuticorin People” என்று ஆங்கிலத்தில் அடித்துப் பிரிண்ட் செய்துள்ளனர். 

மறக்காமல் மேலே கொட்டை வடிவில் பேபிம்மா படத்தையும், சிறியதாக எம்.ஜி.ஆர்., ஜெ.,  போட்டோக்களையும் பிரிண்ட் செய்துள்ளனர். 

"

இந்த மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைல் நோட்டீஸை பார்த்து சென்னை, தூத்துக்குடி ஏரியாக்கள் கிச்சுகிச்சு மூட்டியதுபோல் கலகலப்பாகி கிடக்கின்றன. 

இந்த ரணகளத்துலேயும் ஒரு குதூகலத்தை காட்ட பேபிம்மா டீமால் மட்டுமே முடியும்!?
எப்டி மேடம் இப்டி? How it is possible mam?