Deepa Jayakumar Exclusive interview
சினிமாவில் ஆண்கள் மட்டும்தான் காமெடி செய்ய வேண்டுமா? பெண்களும் காமெடி செய்ய கூடாதா! என்று வந்து ஜெயித்தவர்கள் வரிசையில் மதுரம், மனோரமா, காந்திமதி, கோவை சரளா என்று ஏராளம்.
அரசியலில் சில ஆண்கள் மட்டும்தான் காமெடி பீஸாக சுற்ற வேண்டுமா? ஏன் பெண்கள் கூடாதா! அதிலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான நான் அப்படி இருக்க கூடாதா! என்று கேட்டுவிட்டு களமிறங்கி கலகலக்க வைப்பவர் தீபா.

அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், ஃபுல் மேக் அப்பில் நயன் தாராவுக்கே நாக் அவுட் கொடுக்கும் ரேஞ்சுக்கு உட்கார்ந்து கொண்டு கொடுத்திருக்கும் பதில்கள் தெறிக்க விடுகின்றன.
அதில்...”தீபா, ராஜா சொல்றதை மட்டும்தான் கேட்கிறாங்க அப்படிங்கிற பேச்சு வெளியில இருக்குது, என்கிற கேள்விக்கு ‘நான் முடிவு பண்றதுதான் எல்லாமே!’ என்கிறார். அப்போ பழனிசாமியும், பன்னீர் செல்வமும் மறுபடியும் சசிட்ட போயிடுவாங்களா? என்று கேட்பதற்கு ‘வாய்ப்புகள் இருக்குதுன்னுதான் சொல்றேன்’ என்கிறார்.

பழனிசாமியும், பன்னீரும் உங்களை போட்டியா நினைப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா? என்று கேட்டால் ‘ என்னை எதிர்த்து அவங்க ஜெயிப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா?’ என்கிறார் கெத்தாக. இப்படி நீள்கிறது அவரது பட்டாசு (!?)பேட்டி.
ஹும்! அரசியல் ச்சும்மா சீரியஸாவே போயிட்டிருந்தா போரடிக்குமா இல்லையா!? என்கிறார்கள் விமர்சகர்கள்.
சர்தான்!
