இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத அளவுக்கு தொலைத் தொடர்புக்கு அப்பால் இருந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ. தீபா திடீரென தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை எல்லா கட்சிகளும் ஜனவரியிலிருந்தே தொடங்கிவிட்டன. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு, கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவிட்டன. இத்தனை நாளாக எங்கே இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு தேர்தல் பற்றி ஜெ. தீபா எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் இருந்தார். 2017 ஏப்ரலில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவித்தபோது அவருக்கு இருந்த ஆர்வம் எல்லாம் இப்போது இல்லாமல் போயிருந்தது.