deepa can imitate jayalalitha but deepa cant be jayalalitha

ஜெயலலிதாவை போன்ற லேசான சாயலில் உள்ள தீபா, ஜெயலலிதாவை போலவே தம்மை நினைத்து கொண்டு செயல் படுகிறார்.

அவர் ஜெயலலிதா போல நடந்துகொவதால், ஜெயலலிதாவிடம் மக்கள் நடந்து கொண்டது போல, தீபாவிடம் நடந்து கொள்வார்களா? என்பதுதான் ஆர்.கே.நகர் தொகுதியில் எழுந்துள்ள கேள்வி.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, படகு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 

அவர் தமது பிரசாரத்தின்போது, ஆர்.கே.நகரில் உள்ள அடிப்படைப் பிரச்னைகள், மீனவர்கள் பிரச்னை, ஜெயலலிதாவின் மர்ம மரணம் ஆகியவற்றைப் பற்றி தெள்ளத்தெளிவாக பேசி வருகிறார்.

அத்துடன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் கடுமையாக விமர்சித்துவருகிறார். அவரது இந்த பிரசாரத்துக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பதாக தீபாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஜெயலலிதா சாயலில் தீபா இருப்பதாலும், அவரது வாரிசு என்பதாலும் இந்தத் தேர்தலில் தீபாவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். இதனால், வெற்றி உறுதியாகிவிட்டது என்கின்றனர் அவர்கள். 

அதேநேரத்தில், தீபாவைப் பார்க்க வரும் பெண்கள் கூட்டத்தினரிடம் அவரை நெருங்கவிடாமல் சிலர் தடுக்கின்றனர். அவ்வாறு தடுப்பதால், மக்கள் அதிருப்தியடைகின்றனர். 

தீபாவுக்கு பாதுகாப்பு கொடுப்பது அவசியம்தான், ஆனாலும் அவரைப் பார்க்க வரும் மக்களிடம் கெடுபிடி செய்யக்கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர்.

மேலும், தீபா, தம்மை ஜெயலலிதாவாகவே நினைத்துக்கொண்டு மக்களிடையே சற்று இடைவெளியை கடைபிடிக்கிறார். சில இடங்களில் காரைவிட்டு இறங்காமலும் பிரச்சாரம் செய்கிறார், 

ஜெயலலிதாவின் குணங்கள் அப்படியே தீபாவிடம் உள்ளது என்று கூறும் மக்கள், தாம் ஜெயலலிதா அல்ல என்பதை தீபா உணரவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.