ஆர் கே நகரில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் சார்பில் போட்டியிடும் தீபா வேட்பாளர் பட்டியலில் 34 வது இடத்தில் இடம் பெற்றிருப்பதால் கடும் அதிர்ப்தியில் உள்ளார்.

வரும் 12ம் தேதி ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்வேட்பாளர்கள் வாக்க சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். தினமும் ஆர் கே நகரில் வாக்கு சேகரிப்பிற்கு மாலை நேரத்தில் மட்டும் வரும் தீபா இரண்டு முன்று தெருக்களில் மட்டும் வாக்காளர்களை சந்தித்து விட்டு செல்கிறார். இதனால் அவரது தொண்டர்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களை பதிவு செய்துள்ளது. அதில் முதலாவதாக திமுக வேட்பாளர் மருது கணேஷ் பெயரும்,தினகரன் 2வது இடத்திலும், மதுசூதனன் 4வது இடத்திலும் உள்ளனர்.

தீபாவின் பெயர் சுயேட்சைகளின் பெயர்களுடன் 34வது இடத்தில் உள்ளதால்  இடம் பெற்றுள்ளதால் கடும் அதிர்ப்தி அடைந்துள்ளார். முக்கிய கட்சி வேட்பாளர்களின் பெயர்களுக்கு அடுத்தபடியாக தனது பெயரை இடம் பெற செய்யாமல் 34வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் வருத்தம் அடைந்திருப்பதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.