ரஜினி என்னதான் சிறுபான்மையினரை ஆதரித்தாலும் அவரை சிறுபான்மை மக்கள் ஏற்கமாட்டார்கள். இதையெல்லாம் புரியாமல் சினிமா இயக்குநர்கள் சொல்லிக் கொடுக்கும்படி ரஜினி நடிப்பது பாவம்: அர்ஜூன் சம்பத்

(எப்டியெப்டி...’இதெல்லாம் புரியாம நடிக்கும் ரஜினி பாவமா?!’ தலைவரு தெளிவ்வ்வ்வாகத்தான் இருக்காருண்ணே. உங்கள மாதிரி ஆளுங்கதான் அவரு ஆன்மிக அரசியல்ன்னு சொல்றப்ப சிரிக்கிறது, சினிமாவுல சிறுபான்மை நண்பன்னு நடிக்கிறப்ப அழுறதுன்னும் குழம்பிக் கிடக்குறீங்க. தண்ணிக்குடிங்க தண்ணியக்குடிங்க.)

* பேட்ட படம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸாக வேண்டியதில்லை. ஆனால் யங் ஹீரோக்களுடன் மோதணும்னு சொல்லி, ரஜினிதான் விருப்பப்பட்டு இந்த போட்டியில் இறங்கினார்: செய்தி. 

(அவருதான் ஆசப்பட்டார் சரி, கூட இருக்கிறவய்ங்களாச்சும் கொஞ்சம் யதார்த்தத்தை எடுத்துச் சொல்லி, ‘தல இது 1990s இல்ல’ன்னு சொல்லியிருக்கணுமா இல்லையா? இப்படி சிக்க விட்டு சின்னாபின்னமாக்கிட்டீங்களே டா, அந்தப் பெரியவர் சாபம் உங்கள ச்சும்மா விடுமா?)

* ’தமிழ் மக்க நாம எதுக்கு பிரசவத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரி பக்கம் போகணும்? அந்த காலத்து மறத்தமிழச்சிக வீட்டிலேயே சிங்கக்குட்டிகள பெத்துப்போட்டாய்ங்கடா.’ அப்படின்னு பேசிட்டு இப்போ நீங்க மட்டும் பிரைவேட் ஆஸ்பத்திரி போயி பிள்ளையை பெத்துருக்கீங்களே அண்ணே?! என்று சீமானை அவரது கட்சி இளைஞர்களே கலாய்க்கிறார்கள்: செய்தி.

(அடேய் அப்ரசண்டிகளா! ஊருக்கு ஒரு பேச்சு, தனக்கு ஒரு வீச்சுன்னு வாழுறவய்ங்க பேருதான் தலைவரு. முதல்வரா இருந்த ஜெ., கவருமெண்டு ஆஸ்பத்திரியிலயா சேர்ந்தாங்க? மொழிப்போர் வீரர் கருணாநிதியோட பேரய்ங்க ஃபுல்லா பேருக்கும் இந்தி தெரியும், கலாசாரம் பற்றி பேசுற கமலோட பர்ஷனல் லைஃபு ஒலகத்துக்கே தெரியுமா இல்லையா?)

* அரசியலில் எந்த அனுபவமும் இல்லாத ஆளு ரஜினி. ஆனா முதல்வராக ஆசைப்படுறார். தன்னை இடது சாரியுமில்லை, வலது சாரியுமில்லைன்னு அடையாளப்படுத்துற கமலை நம்பிப் போனா விபரீதங்கள்தான் நடக்கும்: முத்தரசன். 

(அதெல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும் முத்தண்ணே. அரசியல்ல ஆழ்ந்த அனுபவம் வெச்சிருக்கிற, இடது சாரிங்க உங்களுக்கு கடந்த எந்த தேர்தல்லேயும் ஒத்தைக்கு ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியலையே! நீங்க கூட்டணிக்கு வந்தாலே விபரீதம் வருமுன்னு ரெண்டு பெரிய கட்சிகளும் அலறுதே, அதுக்கு என்னா பண்ணுவீங்க?)

* தீபா பேரவையில் மாதவனுக்கு திடீரென பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதில், மாதவன் மீதான தீபாவின் அரசியல் பயமே காரணம். பதவி கொடுத்து அமுக்கிவிட்டால், வீணாக வெளியே போய் தனி அரசியல் சக்தியாக உருவெடுக்க மாட்டார்! என்று நினைத்தே தீபா இந்த முடிவை எடுத்துள்ளார்: செய்தி.

(சில விஷயங்கள் சிரிக்கிற வைக்கும், சில விஷயங்கள் அழ வைக்கும். மேலே வாசிச்ச இந்த விஷயத்துக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு எங்களுக்கே தெரியல மக்கழேய்ய்ய்ய்! நீங்களே விவாதம் நடத்தி கமெண்ட்ஸ் பாக்ஸ்ல ஒரு முடிவுக்கு வாங்க ப்ளீஸ்!)