பேபிம்மா அண்ட் மாதுக்குட்டி கோஷ்டியின் அலும்பலுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. ஆமாம், அவங்க அடிக்கும் அந்தர் பல்டியும், தில்லாலங்கடியும் ஒரு பக்கம் இருந்தாலும் அவர்களே காண்டாகும் அளவிற்கு காமெடி பண்ணும் சம்பவத்தை சீரியஸாக நடத்துவது தான் கொடுமையின் உச்சம், அப்படியான சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது.

அதிமுகவுடன் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இணைந்து செயல்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு அடுத்த நான்கு நாட்களில் அப்படியே காற்றில் பறக்க விட்டு விட்டு,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கு பின் அதிமுக நிலைக்க வேண்டும் என விரும்பினார். அதனால் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என ஜெ.தீபா அந்தர் பல்டி அடித்தார். 

இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தனது கணவர் மாதவன் மற்றும் தனது கட்சி  தொண்டர்கள் பட்டாளத்தோடு ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற அதிமுக தீபா, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு வந்திருந்த தொண்டர் ஒருவர், என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் வருவதைப்போல, வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி முருகேசன், வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி முருகேசன் என ஸ்பெஷல் ஐட்டத்தை வடிவேலு ரெடி பண்ணி வைத்திருப்பதைப்போல இங்கேயும் ஒரு காமெடி பீஸ் சீரியஸ் ரியாக்ஷன் கொடுத்திருந்தது. 

"

அதாவது, வருங்கால தமிழக முதல்வர் புரட்சித்தலைவி தீபாம்மா... செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆளப்போகும் புரட்சித்தலைவி தீபாம்மா, அம்மா புரட்சித்தலைவி அம்மா உடைய அரசியல் வாரிசு தீபாம்மா, நாளை தமிழகத்தை ஆள போகின்ற, ஆளுகின்ற தீபாம்மா வருங்கால தமிழகத்தின் முதல்வர் தீபாம்மா, புரட்சித்தலைவர் மாதவன் சார்... புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவி மாதவன் சார்... புரட்சித்தலைவர் மாதவன் சார்... புரட்சித்தலைவி அம்மா வருங்கால தமிழக முதல்வர் புரட்சித்தலைவி தீபாம்மா என பேபிம்மாவே வெட்கப்பட்டு சிரிக்கும் அளவிற்கு மாஸ் காட்டினார் அந்த தொண்டர்.

அதுவும் கடைசியாக, 9 கோடி தமிழக மக்களின் பாதுகாவலர் தீபாம்மா ...தமிழக மக்களின் பாதுகாவலர் புரட்சித்தலைவர் தலைவி அம்மா, நாளை சரித்திரம் நம்ம தீபாம்மாவின் சரித்திரம்... நாளை வெல்லப்போவது தீபாவின் சபதம்! என அதிமுக தொண்டர்களையே குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்த சம்பவம் நடந்தது. இந்த புகழாரத்தை ரசித்து ரசித்து சிரித்தார் பேபிம்மா அண்ட் மாதுகுட்டி.