Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை விரைவாக முடிவுக்கு கொண்டு வர இதை செய்தால் போதும்.. அரசுக்கு ஐடியா கொடுக்கும் ராமதாஸ்..!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளது. இது மகிழ்ச்சியடைவதற்கான தருணம் இல்லை என்றாலும் கூட, விரைவில்  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் புள்ளிவிவரம் என ராமதாஸ் கூறியுள்ளார். 

Decreasing Corona..Chennai The situation with increasing testing Need to control quickly... ramadoss
Author
Tamil Nadu, First Published May 17, 2021, 3:23 PM IST

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளது. இது மகிழ்ச்சியடைவதற்கான தருணம் இல்லை என்றாலும் கூட, விரைவில்  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் புள்ளிவிவரம் என ராமதாஸ் கூறியுள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் சுமார் இரு மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்திருக்கிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளது. இது மகிழ்ச்சியடைவதற்கான தருணம் இல்லை என்றாலும் கூட, விரைவில்  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் புள்ளிவிவரமாகும்.

Decreasing Corona..Chennai The situation with increasing testing Need to control quickly... ramadoss

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 33,181ஆக குறைந்துள்ளது. இது நேற்று முன்நாளின் தொற்று எண்ணிக்கையான 33,658-ஐ விட 477 குறைவு ஆகும். அதேபோல், சென்னையில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 6247 ஆக குறைந்து விட்டது. நேற்று முன்நாள் சென்னையில் இந்த எண்ணிக்கை 6640 ஆக இருந்த நிலையில் நேற்று 393 குறைந்துள்ளது. சென்னையில் கடந்த 12-ஆம் தேதி 7564 ஆக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து  வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னையில் கொரோனா தொற்று 1317 குறைந்துள்ளது. சென்னையிலும், தமிழ்நாட்டிலும் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப் பட்டு வரும் நிலையிலும் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Decreasing Corona..Chennai The situation with increasing testing Need to control quickly... ramadoss

சென்னையில் கொரோனா தொற்று விகிதமும் 23 விழுக்காட்டிலிருந்து குறைந்து 20 விழுக்காட்டிற்கும் கீழ் வந்திருப்பது நிம்மதியளிக்கிறது. இத்தகைய தருணத்தில் தமிழக அரசு நோய்த்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்றை விரைவாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதற்கான முதல் பணி சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்துவது தான். சென்னையில் கடந்த சில வாரங்களாக சராசரியாக தினசரி 30 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சோதனை செய்யப்படாமல் கொரோனா தொற்றுடன் நடமாடிக் கொண்டிருப்போரின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக 1.8 பேருக்கு நோயைத் தொற்றச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய சூழலில் அதிக எண்ணிக்கையில் சோதனைகளை செய்யும் போது நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் கண்டு  குணப்படுத்த முடியும்; அதன் மூலம் அவர்கள் வழியாக பிறருக்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். 

Decreasing Corona..Chennai The situation with increasing testing Need to control quickly... ramadoss

சென்னையில் கொரோனா சோதனை எண்ணிக்கையை தினசரி 50,000 ஆக அதிகரிக்க வேண்டும். சோதனைகளை அதிகரிக்கும் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது போன்ற தோற்றம் ஏற்படும். எனினும் பாதிக்கப்பட்டவர்களை அதிக எண்ணிக்கையில்  மருத்துவக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து விடுவதால், அவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். சென்னையில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதால், அதிக சோதனைகளின் காரணமாக கூடுதலாக நோயாளிகள் கண்டறியப் பட்டாலும் கூட அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.

Decreasing Corona..Chennai The situation with increasing testing Need to control quickly... ramadoss

அதே நேரத்தில்  சென்னையில் நோய் பாதிப்பையும், நோய் பரவலையும் விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் அதிக அளவிலான சோதனைகளை செய்ததன் மூலம் தான் கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தது. அதன்பின்னர் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை செலுத்தியதன் பயனாகவே புதியத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடிந்தது. அதேபோல், சென்னையிலும், பின்னர் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதேபோல் தினசரி போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் 3 லட்சமாக அதிகரித்து கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios