ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து முக்கிய முடிவு? இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை காலை 9.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது, ஆன்லைன் ரம்மி தடை, ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை காலை 9.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க;- திமுக துணைப் பொதுச் செயலாளராகிறார் எம்.பி. கனிமொழி? விரைவில் வெளியாகபோகும் அறிவிப்பு?
சட்டப்பேரவை கூட்டத்தில் என்னென்ன சட்ட மசோதாக்களை தாக்கல் செய்வது, வைக்கப்பட வேண்டிய அறிவிப்புகள், விசாரணை அறிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது மற்றும் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கைகள் பேரவையில் வைக்கப்படும். மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை போன்ற அவசர சட்டங்களும் தாக்கலாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- ஜெகன்மோகன் அறிவிப்பு.. அன்று ஜெயலலிதா செய்ததை முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டும்.. ஐடியா கொடுக்கும் தினகரன்.!