Dalith MP complait yogi adityanath to modi
உத்தர பிரதேச பாஜக எம்.பி. ஒருவர் தான் தலித் என்பதால் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னை அடித்து துரத்தியதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்
உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி பாஜக எம்.பி. சோட்டோ லால். இவர் தான் ஒரு தலித் என்பதால் கட்சியினர் யாரும் தன்னை மதிப்பதல்லை என்றும், தன் தொகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளும் தன்னை ஒரு பொருட்டாகவே நினைப்பதில் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே, மாநில செயலாளர் சுனில் பன்சால் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் இதுகுறித்து புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அவரை யோகி ஆதித்யநாத் அடித்து மோசமாக திட்டி வெளியே அனுப்பியதாக சோட்டோ லால் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சோட்டோலால் பிரதமர் மோடியக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன் பின்னர் ஆவது நடவடிக்கை எடுக்கப்படுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சோட்டோ லால் மேலும் தேசிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. ஆணையத்திடமும் இதுகுறித்து புகார் கடிதம் அளித்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து எம்.பி. ஒருவர், பிரதமரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
