Asianet News TamilAsianet News Tamil

வீட்டுக்குள் புகுந்து பெண்களை கிறிஸ்துமஸ் கொண்டாட விடாமல் தடுத்த இந்துத்துவா ஆதரவாளர்கள்... பகீர் வீடியோ..!

உங்களிடம் நாங்கள் மதமாறியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்பினால் அது எங்கள் விருப்பம்

Dalit women stave off vigilantes from home during Christmas
Author
Karnataka, First Published Dec 31, 2021, 2:22 PM IST

கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட விடாமல் தடுத்த இந்துத்துவா ஆர்வலர்களை பெண்கள் தடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள பிலிதேவாலயா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு குடும்பம் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை அறிந்த பஜ்ரங் தள ஆர்வலர்கள் குழு ராமச்சந்திரா என்ற தலித் நபரின் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. துமகுருவில் உள்ள குனிகல் தாலுகாவைச் சேர்ந்த பஜ்ரங் தள் தலைவர் ராமு பஜரங்கி, பஜ்ரங் தள் செயல்பாட்டாளர்களைத் திரட்டி, ராமச்சந்திராவின் வீட்டுக்குள் புகுந்தார். குடும்ப பெண்களின் எதிர்ப்பை இந்த குழு சந்தித்தது.

 

அந்த வீடியோவில் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், அவர்களின் மிரட்டல் குறித்து கேள்வி எழுப்பியதும் பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோவில்,  ஆண்கள், ’’ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறீர்கள் என்று பெண்களிடம் கேட்கிறார்கள். அதற்கு பெண்கள் ’’நாங்கள் கிறிஸ்தவ விசுவாசிகள். எங்களை கேள்வி கேட்க நீங்கள் யார்? நாங்கள் ஏன் தாலியை அணிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் தவறில்லை. யாரை வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய சுதந்திரம் இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.  அதற்கு, நீங்கள் ஏன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினீர்கள்? இந்துத்துவாவாதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பெண்கள், ‘’நாங்கள் இந்துக்கள் என்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் கடைப்பிடிப்பவர்கள். இங்கே மதமாற்றம் எங்கே நடந்தது? உங்களிடம் நாங்கள் மதமாறியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்பினால் அது எங்கள் விருப்பம்" என்று கூறுகின்றனர். 

போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். எனினும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. குனிகல் காவல் நிலைய ஆய்வாளர் பி ராஜு கூறுகையில், தகராறில் ஈடுபட்ட இரு பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். வாக்குவாதம் மட்டுமே நடந்ததாகவும், வன்முறை இல்லை என்றும் அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios