Asianet News TamilAsianet News Tamil

அறிவு நாணயமற்றவர்... பொய்ப் பேசுவது அழகல்ல... ரஜினியைக் காய்ச்சி எடுத்த தி.க.!

பெரியாரை நோக்கி செருப்பு வீசப்பட்டது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு ரஜினி பதிலளிக்கவில்லை. பெரியாரை நோக்கி ஜனசங்கத்தினர் செருப்பை வீசினார்கள். அதற்கு எதிர்வினையாகத்தான் தி.க. தொண்டர்கள், ராமர் படத்தை செருப்பால் அடித்தனர். ரஜினி முன்னுக்குபின் முரணாகப் பேசுகிறார். இந்தச் சம்பவத்தால் அத்தேர்தலில் திமுகவுக்கு கெட்டப்பெயர் வந்தது என ரஜினி கூறினார். ஆனால், அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

D.K. Vice president slam Rajini on thuglak talk issue
Author
Chennai, First Published Jan 22, 2020, 7:11 AM IST

மறுக்க முடியாது மறக்க வேண்டியது என ரஜினி கூறுகிறார். மறக்க வேண்டியது என்றால் ஏன் அதை மறுபடியும் நினைவூட்டுகிறார் என்று தி.க. துணை தலைவர் கலி. பூங்குன்றன் கேள்வி எழுப்பியுள்ளார்.D.K. Vice president slam Rajini on thuglak talk issue
துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானது. அந்தப் பேச்சு குறித்து ரஜினி விளக்கம் அளித்தார். “நான் பேசியது சரிதான். கற்பனையாக எதையும் பேசவில்லை. அதனால், மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்தார். 1971-ம் ஆண்டில் சேலத்தில் தி.க. நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தி.க. துணை தலைவர் கலி. பூங்குன்றன் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.D.K. Vice president slam Rajini on thuglak talk issue
 “துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, துக்ளக்கில் வெளிவந்தது எனக் கூறிவிட்டு இன்று அவுட்லுக் பத்திரிக்கையில் வெளிவந்ததைக் காட்டுகிறார். இதன்மூலம் ரஜினி அரைகுறையாகப் படித்துவிட்டு பேசுகிறார் என்பது தெரிகிறது. நியாயமாக துக்ளக் இதழை அவர் காட்டி இருக்க வேண்டும். ரஜினி துக்ளக்கை காட்டாததற்கு துக்ளக் இதழில் அவ்வாறு எதுவும் வரவில்லை, வெளிவந்ததாகப் பொய்யை ரஜினி சொல்லியுள்ளார்.D.K. Vice president slam Rajini on thuglak talk issue
பெரியாரை நோக்கி செருப்பு வீசப்பட்டது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு ரஜினி பதிலளிக்கவில்லை. பெரியாரை நோக்கி ஜனசங்கத்தினர் செருப்பை வீசினார்கள். அதற்கு எதிர்வினையாகத்தான் தி.க. தொண்டர்கள், ராமர் படத்தை செருப்பால் அடித்தனர். ரஜினி முன்னுக்குபின் முரணாகப் பேசுகிறார். இந்தச் சம்பவத்தால் அத்தேர்தலில் திமுகவுக்கு கெட்டப்பெயர் வந்தது என ரஜினி கூறினார். ஆனால், அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வரலாறு தெரியாமல் அரைகுறையாக ரஜினி பேசுவது அவருடைய அறிவு நாணயமற்ற தன்மைக்கு உதாரணம்.

D.K. Vice president slam Rajini on thuglak talk issue
மறுக்க முடியாது மறக்க வேண்டியது என ரஜினி கூறுகிறார். மறக்க வேண்டியது என்றால் ஏன் அதை மறுபடியும் நினைவூட்டுகிறார். ரஜினியை பாஜக பின்னால் இருந்து இயக்கிக்கொண்டிருக்கிறது. பெரியாரை மையப்படுத்தி எதிர் அரசியலை நடத்த திட்டமிடுகிறார்கள். தவறாக சொல்லியிருக்கிறோம் என தெரிந்த பிறகு அவர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ரஜினி மீது காவல் துறை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இந்த அரசு பெரியாரைப் பற்றி ரஜினி பேசியதற்கு ஆதரவாக இருக்கிறது என பொருள் வரும். அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios