Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு...?? முதலமைச்சருக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை..??

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சருக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
 
Curfew for another 2 weeks in Tamil Nadu ... Medical expert committee recommends to the Chief Minister .. ??
Author
Chennai, First Published May 22, 2021, 11:57 AM IST

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சருக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தொற்றால் அதிக உயிரிழப்பை சந்திக்கும் மாநிலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையைவிட பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நாளொன்றுக்கு குறைந்தது  34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 

Curfew for another 2 weeks in Tamil Nadu ... Medical expert committee recommends to the Chief Minister .. ??

திரும்பிய பக்கமெல்லாம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போதிய படுக்கை வசதியின்மை, ஆட்சி தட்டுப்பாடு மிகக் கடுமையாக நிலவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவித்தது, அது நடைமுறையிலுள்ளது. அதேபோல மே 15ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 10 மணிவரை மட்டுமே மளிகை கடைகள் மற்றும் இதர கடைகள் திறந்திருக்க வேண்டும் என அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. எனவே பொதுமக்கள் வெளியில் வர முடியாத வகையில் முழு உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது, அதேபோல் 

Curfew for another 2 weeks in Tamil Nadu ... Medical expert committee recommends to the Chief Minister .. ??

தமிழகத்தில்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 24ஆம் தேதி  அதிகாலை நிறைவடைய உள்ள நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது மற்றும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, மருத்துவ வல்லுநர் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அதில், தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சருக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios