சென்னையை தொடர்ந்து மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வரும் 29ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

 மாவட்ட ஆட்சியர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தொற்று அதிகரித்த மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை அறிவித்து விட்டார்.  அதேபோல டெல்லியில் பள்ளிகளுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அந்த மாநில துணை முதலமைச்சர் அறிவித்து விட்டார்.  

ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப் படும் போதும் இது போன்ற நிலையே நீடிக்கிறது. வட மாநிலங்களில்  முதலில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தேதி அறிவிக்கப்படுகிறது.  அவற்றை பின்பற்றியே தென் மாநிலங்களும்  ஊரடங்கு நீட்டித்து தேதி அறிவிக்கின்றன. இதுவரை தொற்று குறையாத நிலையில்  தமிழக அரசு  என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பதை  29ம் தேதி தான் பார்க்க வேண்டும். அதேவேளை ஜூலை 15 ஆம் தேதி வரை எந்த ஒரு சர்வதேச விமானங்களும் இயங்காது என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொறோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டு வருகிற நிலையில் 4 ½ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதித்துள்ளது.தற்போது வரை இயங்கிக் கொண்டு இருந்த ரயல் சேவையும் ரத்து செய்யப்படுவதாய் ரயில்வே துறை அறிவித்துள்ளது.மேலும் இந்தியா முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் வரும் ஆகஸ்டு 12-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் ஜூலை 15-ம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது என அமைச்சகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் சரக்கு விமானங்களுக்கு ஏந்த ஒரு தடையும் இல்லை என்று கூறப்பட்டது. “வந்தே பாரத்” மூலம் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருகின்றனர். முன்பாக பொதுமுடக்கம் தளர்த்தப்படும் என்று அறிவித்தப்போது விமான போக்குவரத்து, ரயில் சேவை, திரையரங்கம், விழா மன்றங்கள் , உடற்பயிற்சி கூடங்கள், வழிப்பாட்டுத் தளங்கள், கலாசார நிகழ்வுகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை தொடர்கிறது