Asianet News TamilAsianet News Tamil

ஆட்டத்தை ஆரம்பித்து அதகளம் பண்ணும் அமமுக கொ.ப.செ... தினகரன் போட்டு கொடுத்த பக்கா ரூட்டு!!

தினகரன் பாணியிலேயே யாரையும் புண்படுத்தாமல் இயல்பாக மக்களின் மொழியில், எதற்காகவும் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக நிதானமாக பேச வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் சிஆர் சரஸ்வதி.

CR Saraswathi meeting with party members
Author
Chennai, First Published Aug 13, 2019, 3:00 PM IST

தினகரன் பாணியிலேயே யாரையும் புண்படுத்தாமல் இயல்பாக மக்களின் மொழியில், எதற்காகவும் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக நிதானமாக பேச வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் சிஆர் சரஸ்வதி.

ஆனால் இப்போது திமுக, அதிமுகவில் பேச்சாளர்களின் நிலை கவலைக்குரியதாக இருக்கும் நிலையில், அமமுகழகத்துக்கு என்று புதிய பேச்சாளர்களை உருவாக்க தினகரன் தனிக் கவனம் எடுத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இதன்படி அமமுக கொ.ப.செ. சி.ஆர்.சரஸ்வதிக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்து தமிழகம் முழுவதும் பேச்சாளர்களைத் தேடித் தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து கழகத்துக்கு பலம் சேர்க்கச் சொல்லியிருக்கிறாராம் தினகரன்.அதன்படி ஆகஸ்டு 10 ஆம் தேதி தஞ்சையிலும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திருச்சியிலும் பேச்சாளர்கள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தார் கட்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன்.

CR Saraswathi meeting with party members

பேச்சாளர்கள் தேர்வில் 6 மாவட்டத்திலிருந்து 15 பெண்கள் உட்பட 150 பேர் பங்கேற்றார்கள், அவர்களுடன் கட்சியினரும் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய கூட்டம் மாலை 3.30 மணி வரையில் நான் ஸ்டாப்பாக நடைபெற்றது, ஒவ்வொருவருக்கும் ஒரு நிமிடம் முதல் ஒன்றரை நிமிடங்கள் வரை கால அவகாசம் ஒதுக்கப்பட்டது.

கடைசியாகப் பேசிய கொ.ப.செ.சரஸ்வதி, திராவிட கட்சிகளுக்குப் பலமே மேடைப்பேச்சுதான், திராவிடக் கொள்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தந்தை பெரியார், அண்ணா மேடைப் பேச்சுகளைத் தேடிக் கேளுங்கள். திராவிட கொள்கையை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும். பலரும் திராவிட கொள்கையை மறந்துவிட்டார்கள், இப்போது அமமுகதான் மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும் என்றவர்.
CR Saraswathi meeting with party members

நமது பொதுச் செயலாளர் தினகரன்ஆலோசனைகள் படி மேடையில் பேசும்போது கவனமாகவும் கண்ணியமாகவும் பேசவேண்டும்.எதிர்க்கட்சியினரை தப்பாக, மரியாதைக்குறைவாக என்று பேசக்கூடாது, அவங்களோட கருத்துகள் வாதம் மட்டுமே பண்ணனும். மொத்தத்தில் நமது பொதுச் செயலாளர் தினகரன் பாணியிலேயே யாரையும் புண்படுத்தாமல் இயல்பாக மக்களின் மொழியில், எதற்காகவும் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக நிதானமாக பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அமமுக கட்சி மேடைகளில் நான் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. அமமுகவை பலப்படுத்த என்னைப் போலவே பல தினகரன்கள் பேச வேண்டும். அதற்காகத்தான் இந்த பட்டறை. எனவே பல தினகரன்களை உருவாக்க வேண்டும் என்று தினகரனே உத்தரவிட்டதன் பேரில்தான் மாநிலம் முழுதும் தினகரன்களை கண்டறியும் பேச்சாளர் பட்டறைகளை நடத்தி வருகிறது அமமுக. 

Follow Us:
Download App:
  • android
  • ios