அசாம் மாநிலம் பாஜக  சில்சார் எம்.எல்.ஏ. திலிப் குமார் பால் அங்கு கலாச்சார நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இசை மற்றும் நடனம் ஆகியவை நேர்மறையான தாக்கங்கள் ஏற்படுத்துகிறது. கிருஷ்ணர் ஆடிக்கொண்டு புல்லாங்குழல் ஊதியதை கேட்டால் பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அவர் மேற்கோள் காட்டிய ஆராய்ச்சி குறித்து கேள்வி எழுப்பியபோது திலிப் குமார் பேசுகையில், குஜராத்தை தளமாக கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டது, அதில் புல்லாங்குழல் இசைக்கு மற்றும் பால் விளைச்சல் அதிகரிப்புக்கு இடையேயான தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தூய்மையான வெள்ளை பால் கொடுக்கும் வெளிநாட்டு இனங்களின் பால் போலல்லாமல், வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்திய மாடுகளின் பாலின் தரம் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. 

இந்திய மாடுகளின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ், வெண்ணெய் போன்ற தயாரிப்புகளும் வெளிநாட்டு இனங்களை விட மிகவும் சிறந்தவை எனக் குறிப்பிட்டார்.  அதனால் நமது பசு மாடுகளின் முன்பு நின்று கொண்டு நாம் புல்லாங்குழல் வாசித்தால் பால் அதிகமாக சுரக்கும் என்றும் திலிப் குமார் பால் எம்எல்ஏ தெரிவித்தார்.