பசு மாடுகள் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன… பசுக்களோடு வாழ்ந்தால் காசநோய் குணமாகும்… முதலமைச்சர் அதிரடி தகவல் !!
டெராடூனில் நடந்த ஒருவிழாவில் ஒன்றில் பேசிய உத்தரகாண்ட் முதலமைச்சர், பசு மாடுகள் ஆக்ஸிஜனை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன என்றும் பசுக்களோடு வாழ்ந்தால் காசநோய் குணமாகும் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.
உத்தரகண்ட்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிவேந்திர சிங் ராவத் என்பவர் முதலமைச்சராக உள்ளார்..இந்நிலையில், டெராடூனில் நடந்த ஒருவிழாவில் திரிவேந்திர சிங் ராவத்கலந்து கொண்டு பேசினார்.
அப்போதுதான் பசு மாட்டுப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து, தானே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தவர் போல பேசினார். மாடுகள் ஆக்சிஜனை உள்ளிழுத்துஆக்சிஜனை மட்டுமே வெளியேற்றுகின் றன; ஒரு பசுவை தடவிக் கொடுப்பதன் மூலம் மனிதர்களாகிய நாம் நமது சுவாசப்பிரச்சனைகளைக் குணப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
இதற்கெல்லாம் உச்சமாக, பசுவுடன் நெருக்கமாக இருந்தால் காசநோயை குணப்படுத்த முடியும் என்றும் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்..
திரிவேந்திர சிங் ராவத் சொன்னதெல்லாம் உண்மையா என்று கால்நடை மருத்துவரிடம் கேட்டபோது , பசு மாடும் பிற உயிரினங்கள் போலத்தான். அதுவும் கார்பன்டை ஆக்சைடைத்தான் வெளியிடுகிறது என தெரிவித்தார்.
ஏற்கனவே உத்தரகண்ட் மாநிலத்தின் பாஜகதலைவரும் நைனிடால் தொகுதி எம்எல்ஏவுமான அஜய் பட், சில நாட்களுக்கு முன்புதான் அவரது‘ஆராய்ச்சி’ முடிவுகளை வெளியிட்டார்.
கர்ப்பிணிப் பெண்கள் உத்தரகண்ட்டின், பாகேஸ்வர் மாவட்டத்தில் உள்ள ‘கருட் கங்கா’ ஆற்றின் நீரைக் குடித்தால் சிசேரியன் பிரசவத்தை தவிர்க்கலாம்; இந்த ஆற்றில் உள்ள கல்லை எடுத்து,பாம்பு கடித்த இடத்தில் உரசினால், விஷமேமுறிந்துபோகும் என்றெல்லாம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது